எழுகாலம் விழியற்றதோ என்னும் எண்ணம் எழுந்தது. சொல்லில் இருந்து மட்டுமே இவையனைத்தையும் அறியவேண்டியதென்பதனாலேயே விழியின்மை கொண்டது என சஞ்சயன் எண்ணும் இடம் ஒரு அபாரமான கவித்துவத்தைக் கொண்டது. இன்று குருக்ஷேத்திரப்போரை நோக்கிக்கொண்டிருக்கும் நாமெல்லாம் அன்று கண்ணீல்லாமல் பார்த்த திருதராஷ்டிரருக்குச் சமானமானவர்கள். நாம் அந்தப்போரை வெறும் வார்த்தைகள் வழியாகவே பார்க்கிறோம். நாம் அதை எப்படியும் கற்பனையில்தான் அறிந்தாகவேண்டும். ஆகவேதான் அவன் அதை கண்ணில்லாதவர்க்கு சொல்கிறான். அந்த இடத்தின் கற்பனை மூலத்தில் உள்லதா இங்கே சொல்லப்படுவதா என்று தெரியவில்லை. ஆனால் பிரமிக்கச்செய்தது
கே.மகேஷ்