Sunday, December 2, 2018

அம்பையும் கங்கையும்




அன்புள்ள ஜெ

நலம்தானே?

நாவல் முடிந்துவிட்டது. மிகுந்த மனச்சுமையை உருவாக்கிய நாவல். இறுதியில் கங்கையின் மடியில் அம்பை கிடக்கும் காட்சி. அதுவரை அம்பைக்கும் கங்கைக்குமான உறவே என் மனசில் படவில்லை. முதற்கனலிலேயே அம்பையை கங்கையில் ஏற்றிக்கொண்டு நிருதன் செல்லும்போது கங்கைவர்ணனை வருகிறது.

இங்கே அன்னையும் மகளும் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். இருவரும் பீஷ்மருக்காகக் கண்ணீர்விடுகிறார்கள். அவர்களின் துயரம் உண்மையானது. அம்பை விதியை நினைத்திருக்கக்கூடும். இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணி மருகியிருக்கக் கூடும்]

ஜெயராமன்