அன்புள்ள ஜெயமோகன் சார்,
கார்கடலின் மூன்றாம் அத்தியாயத்தில் ஏகாக்ஷன் வந்துவிட்டார். "குகை" சிறுகதையில் வந்த கதைசொல்லி போல ஒற்றைக்கண் கொண்டு பூமியின் கீழ் இருந்து மேலே நடப்பவற்றை அல்லது பூமியின் ஒரு புறத்தில் இருந்து வேறொரு புறத்தில் நடப்பதை காணும் ஒரு யோகி.
துருபதனுக்கு பஞ்சாலியின் பிறப்பை அறிவிக்கும் அதர்வவேததவர் போலவே இவருக்கும் முரணான மனித உடல். ஆனால் இங்கு ஏகாக்ஷர் பானுமதியை சந்திக்கிறார். ஆரம்பமும் முடிவுமாய் இரு முனிவர்கள், ஓன்று எதிர்காலத்தை பிம்பமாய் காட்டுவது,இன்னொன்று நிகழ்காலத்தில் பருப்பொருளாய் நடப்பதை மட்டும் மற்றவர்களின் உள்ளத்தில் வழியே பார்க்க முடிந்து அப்படி பார்க்க முடியாதவர்களுக்கு வார்த்தைகளாய் காட்டுவது. அவர் தனது ஒற்றை கண் வழியாய் காண்பதை நாங்களும் காண ஒற்றை மனமாய் காத்திருக்கிறோம் சார்.
regards,
stephen raj kulasekaran.p