ஜெ
பீஷ்மர் படுகளத்தில்
கிடப்பது பல அர்த்தங்கள் கொண்டது. அவர் இன்னும் தன் பிடியை விடவில்லை. உயிர்விட முடிவெடுக்கவில்லை.
அவர் அவ்வளவு முதியவர். உலகியலில் ஆர்வத்தை இழந்துவிட்டவர். அக்கறை இல்லாமல் போரிட்டவர்.
இது மேலே தெரியும் பிம்பம். ஆனால் உண்மையில் அப்படி அல்ல. அவர் உள்ளூர பிடியை விடாதவராகவே
இருக்கிறார். ஆகவேதான் அவரால் சாகமுடியவில்லை. இப்போது சாகும்முடிவை அவரால் எடுக்கமுடியும்
என்றால் அவர் இங்கே போருக்கே வந்திருக்கவே மாட்டார். எக்கேடா கெட்டுப்போங்கள் என்று
காட்டுக்குச் சென்றுவிட்டிருப்பார்
உலகத்தை வலுக்கட்டாயமாகத்
துறந்தவர் அவர். ஆகவே அவருக்குள் உலகம் சிறிய துளியாக இருந்துகொண்டே இருக்கிறது. அது
மிகமிக ஆழமானது. ஆகவே மிகமிக ஆற்றல்கொண்டது. அதுதான் அவரை அப்படி வைத்திருக்கிறது.
அவர் அத்தனை எளிதாகச் சாகமுடியாது. அவர் எதையுமே கடக்கவில்லை. எல்லாவற்றையும் ஒதுங்கிச்சென்றவர்.
நோன்பு எவரையும் விடுவிப்பதில்லை. நோன்பை விடமுக்கியமானது கடந்துசெல்லுதல்
அமர்