Wednesday, January 2, 2019

நிலம்படிதல்




ஜெ

மிகச்சாதாரணமாக போகிறபோக்கில் வந்துசெல்கிறது. ஆனால் முக்கியமான ஒரு குறிப்பு அது. இடும்பர்களின் கடைசி இடும்பன் பீமனால் வெல்லப்பட்டான். அவர்களின் குலம் அதோடு அரசகுலமாக மெல்லமெல்ல மாறியது. பார்பாரிகனின் மகன் பின்னாளில் ஷத்ரிய அவையில் அமர்ந்திருக்கிறான். அவர்களிடமிருந்து மௌரியகுலம் உருவாகி வந்தது. எல்லாம் சரிதான். ஆனால் அதற்குப்பின் அவர்களில் அந்த பெருங்கற்களுக்குரிய நாயகர்கள் உருவாகவே இல்லை. பெருங்கற்காலமே அதோடு முடிந்துவிட்டது. அது வளர்ச்சி மட்டும் அல்ல ஒரு வீழ்ச்சியும்கூட. 

அதை உணர்ந்தபோது ஒரு பெரிய வருத்தம் ஏற்பட்டது. நாம் பீமன் இடும்பனை வென்றதை வாசித்திருக்கிறோம். பீமன் இடும்பனை வென்றது அவனை நிலத்துக்குக் கொண்டுவந்து. நிலத்தில் இடும்பனின் கால்கள் நிலைகொள்ளவில்லை. அவன் மரத்துக்குமேல்தான் பெரிய வீரன். நிலத்தில் நிலை கொள்வது என்றால் என்ன பொருள் என்று இப்போதுதான் புரிகிறது. பார்பாரிகனாலோ அவன் தம்பியாலோ நிலத்தில்தான் நடக்கமுடியும். மரங்கள் அவர்களிடமிருந்து விலகிவிட்டன. மொத்தமாக பார்க்கும்போது மலைக்கவைக்கும் ஒரு வரலாற்றுத்தரிசனம் தோன்றியது

அருண்குமார்