Sunday, January 20, 2019

அர்ஜுனனின் தோல்வி



அன்புள்ள ஜெயமோகன்

             மஹாபாரதத்தில் பதினோராவது நாள் போரில் கர்ணன் -


அர்ஜுனன்  நிகழ்த்திய சமயுத்தத்தில் அர்ஜுனன்கர்ணனின் அம்புகளால்  தேர் தட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டு நிலத்தில் விழுந்தான் .பின்பும் கர்ணனின் அம்புகளால்நிலத்தில் அறையப்பட்டு அசையா நிலையில் நிறுத்தப்பட்டான் . யுத்தத்தில் முதன்முறையாக தோல்விமுகம் கண்டான்.பீஷ்மரிடம் கூட நிலத்தில் வீழும் அளவு தோல்வி காணாத அர்ஜுனன் சூரியன் மைந்தன் கர்ணனிடம் தோற்று விட்டான்ஜெயமோகன் அவர்களே தற்செயல் ஒழுங்கு என்பது போல் சூரியனை முதன்மை தெய்வமாக வழிபடும் தைமாதம்முதல் தேதி அன்று வெண்முரசில் இந்திரன் மைந்தனை சூரிய மைந்தன் குருஷேத்திர யுத்தத்தில்தோல்வியுறச்செய்தான் .வெண்முரசு – நூல் இருபது –


கார்கடல்-22  "உளம் சோர்ந்து அர்ஜுனன்  மேலும் வெறிதிரட்டிக்கொண்டபோது கர்ணனின் அம்புகள் வந்து அர்ஜுனனை அறைந்தனநெஞ்சில் அறைந்த அம்பால் அர்ஜுனன் தேர்த்தட்டிலிருந்து தூக்கி வீசப்பட்டான்அர்ஜுனன் கவசம் உடைந்து அம்பு ஆழப்புதைந்து நின்றிருந்தது.வலியலறலுடன் எழ முயன்றபோது மீண்டுமொரு அம்பு அவனைத் தாக்க அவன் நிலத்தில் பதிந்தான்அர்ஜுனன்  உடல்அங்கே கிடந்து துள்ளியது." இந்த யுத்த வர்ணனை யாவும் திருதராஷ்டிரருக்கு சஞ்சயன் சொல்வது போலத்தான்வெண்முரசில் விவரிக்கப்பட்டது .ஆம் பிதாமக பீஷ்மர் வீழ்வால் துவண்டுகிடந்த திருதராஷ்டிரர் சற்றேனும் இந்தவெற்றியால் அமைதி கொள்ள முடியும் .மேலும் நாகர்கள் நெடுங்காலம் வாழ்ந்த காண்டவ வனத்தை அழித்தஅர்ஜுனனை இன்று கர்ணன் உருவில் வென்றன நாகங்கள் .ஆனாலும் இனிவரும் போரில் கர்ணனின் வீழ்ச்சியைபார்க்கத்தான் போகிறோம் .அதற்க்கான காரணத்தை இளைய யாதவர் காம்பில்ய போரில் கர்ணன் வீழ்வு குறித்துசாத்யகியிடம் பேசும் போது இவ்வாறு கூறுகிறார் .வெண்முரசு – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம் – 41  

அஞ்சவேண்டும்.அவ்வச்சம் முற்றிலும் இல்லை என்பதே கர்ணனின் வீழ்ச்சி என்றான் கிருஷ்ணன். “

போர்க்களத்தின் முன் நிற்கையில்ஊழின் பெருந்தோற்றம் கண்டு கைதளர்ந்து வில்நழுவும் வீரனே மெய்மையை அறியக்கூடியவன்.” என்றான் இளையயாதவன் .ஆம் இன்று பதினோராவது போரில் அச்சம் சிறிதுமின்றி போரிட்ட கர்ணன் ,தன்னிடம் இன்று தோற்றஅர்ஜுனனுடன் பொருதும் மற்றொரு நாள் போரில் களம் படுவதே ஊழ்.அது இளையயாதவர் வகுத்தது .

நன்றி ஜெயமோகன் அவர்களே
தி செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்