அன்புள்ள ஜெ
மகாபார்தப்போரில் அர்ஜுனன் நோயுற்றதாகவோ சோர்ந்திருந்ததாகவோ வரவில்லை. ஆனால் அப்படி வராமலிருந்தால் உண்மையில் பல கேள்விகளுக்குப் பதிலே கிடையாது. ஏனென்றால் அவன் கண்முன் அபிமன்யூ கொல்லப்படுகிறான். அவன் பின்னாலிருந்தான். அவன் இரண்டுநாட்கள் பெரிதாக எவரையும் கொல்லவில்லை. மேலும் கர்ணனின் வீரம் கொடை ஆகியவற்றைச் சொல்லவும் சந்தர்ப்பம் தேவை. ஒரே ஒருவனின் வீரத்தை நம்பியே மொத்த போரும் நிகழும்போது அவன் காயம்பட்டு சோர்வடைவதும் அபிமன்யூ இறப்பதும் சரியானதாகவே படுகிறது
சா.குமரவேல்