Wednesday, January 9, 2019

அரவானும் உலூபியும்




அன்புள்ள ஜெ

நலம்தானே?

வெண்முரசில் கர்ணனைப்பற்றிய கதைசொல்லல் எவரால் சொல்லப்படுகிறது என்ற ஐயம் இருந்துகொண்டே இருந்தது. ஏகாக்‌ஷரா அல்லது குடாரரா என எண்ணினேன். ஆனால் ஓரிடத்தில் அரவான் வந்ததுமே அரவான் எங்கிருந்தோ கதையைச் சொல்கிறான் என நினைத்தேன். கதைசொல்லல் அங்கே சென்று முடிந்தபோது ஒரு நல்ல சிறுகதைக்குரிய முடிச்சு போல் இருந்தது. வெட்டப்பட்ட தலை சொல்லும் கதை அதற்குரிய மாயத்துடன் இருந்தது

அந்தப்பகுதி மீண்டும் பழைய அத்தியாயங்களை நினைவூட்டியது. காண்டீபத்தில் அர்ஜுனனின் மாயப்பயணங்கள். உலூபியுடன் அவன் பாம்புப்புற்றில் பொன்னில் புரண்டு கொண்டாடிய தேனிலவு. வாசிக்கும்போது ஓர் உணர்வு இருந்தது. நினைவுகூரும்போது பழைய புராணங்களுடன் அந்தக்கதைகள் அப்படியே கலந்து ஒன்றாகிவிட்டிருப்பதை உணரும்போதுதான் நீங்கள் உண்மையான புராணக்கதைகளை எப்படி அற்புதமாக ஃபேண்டஸியாக நீட்டிக்கொள்கிறீர்கள் என்பது புரிந்தது.


ராஜசேகர்