ஜெ
சாதாரணமாக வந்துசென்றாலும் கடோத்கஜன் இளஞ்சிறுவனாக பாம்பைக்கண்டு அஞ்சுவதும் தந்தை விளையாட்டாக அந்தத் தளிரை எடுத்து வீசியதும் அவன் அலறி வலிப்பு வருவதும் ஆழமான ஒரு மனக்கொந்தளிப்பை உருவாக்கியது. முன்பு பிரயாகையிலேயே அவனுடைய குடிக்கே பாம்புகளுடன் உள்ள பயம் சொல்லப்பட்டிருந்தது . அவர்கள் குரங்குகள் போல. குரங்குகளுக்கு பாம்புதான் பெரிய எதிரி. ஆனால் இவை அனைத்தும் சரியாக நாகபாசத்தில் வந்து இணைகின்றன. நாக அம்பு பட்டு சாகவிருக்கும் குழந்தையின் வலிப்பாகவே அந்த நிகழ்ச்சியைப்பார்க்கமுடிகிறது
ராமச்சந்திரன்