Saturday, May 25, 2019

மணிப்பூரகம்



அன்புள்ள ஜெயமோகன் சார்,                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       இருட்கனியின் 43ம் அத்தியாயத்தில் மணிப்பூரகம் நாட்டிற்கு அப்பால் இருக்கும் சூரியதாயினி என்னும் சிறு சுனை பற்றி கூறபட்டிருக்கிறது. மணிப்பூரகம் என்பது எனக்கு மிகவும் கிளர்ச்சி அளிக்ககூடிய வார்த்தை . எனது மூளையில் மணிபூரகம் என்றால் மணிப்பூர் தான்.மணிப்பூருக்கு ஒரு முறை சென்றபோது வெயில் அடித்து கொண்டு இருக்கும்போதே ஆலங்கட்டி மழை பெய்து வேர்த்து கொட்டியது. வெயில் அடிக்கும்போது சாரலை மட்டும் கண்டிருந்த எனக்கு அந்த நிமிடங்கள்  அளித்த பரவசம் மறக்கமுடியாதது. விக்கிபீடியாவில் மணிபூரகம் என்றால் என்ன என தேடியபோது " மனித உடலின் ஆறு சக்கரங்களில் ஓன்று எனவும் நீர் அதன் குறியீடு " எனவும் வாசித்தேன். அப்போதுதான் சூரியதாயினி சும்மா சுனை இல்லை வேறு எதோ ஒன்றின் மெட்டபோர் என தோன்றியது. குருஷேத்ரம்-ஒடிஷா- சூரியன் என ஏதேதோ மனதுக்குள் குழப்பி அடிக்கிறது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                வெண்முரசில் வரும் "தொல்காலத்திலேயே அடையாளம் காணப்பட்ட எதுவும் மிகச் சிறிதாகவே இருக்குமென அவர்கள் அறிந்திருந்தார்கள். தொன்மையான ஆலயத்தின் சிலைகள் மிகச் சிறியவை. தொன்மையான மலைமுடிகள்கூட சிறியவை என்று அவர்களின் ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்" என்ற   வரிகளை படிக்கும்போது , சபரிமலை ஐயப்பனை முதலில் பார்த்தபோது "என்ன இவ்ளோ சின்ன சிலையாய் இருக்கிறார் ?" என எண்ணியது நினைவுக்கு வந்தது. சபரிமலை ஐயப்பன் குறித்த தத்துவமும் தொல்காலத்திலேயே தோன்றி இருக்கும் போல. சொற்கள் வளரும் சொல்வளர்காடு நைமிஷாரண்யம் போல சொற்கள் குவியும் "சூரியதாயினி  என்னும் விழிச்சுனை" . கண்களையும் கருத்தையும் ஒற்றை மணியில் நிறுத்தி அடைவது.  சூரியதாயினி எதை குறிக்கிறது ? அதை புரிந்து கொள்ள என்ன செய்யவேண்டும் என தெரியவில்லை. இன்னும் இரண்டு மூன்று தடவை படித்தால் விளங்கும் என நினைக்கிறேன்.