அன்புள்ள ஜெ,
வணக்கம் சிகண்டியும் கிருபரும் போர் களத்தில் உரையாடிக்கொள்ளும் இடம் அழகு. நிர்வாண தேசத்தில் கோவணம் கட்டியவன் தான் பைத்தியம் என்பது போல உள்ளது இவர்கள் நிலை.
சிவமுலிகை கதையில் முக் கண்ணன் யோக பிறையை தானொன்றும், மற்றொன்றை கொற்றவைக்கு அணிவித்ததாக வருகிறது, திருவாரூர் கமலாம்பாள் இரட்டை பிறை அணிந்து யோகத்தில் அமர்ந்து இருக்கிறாள். இதுவும் யோக இரவின் குறியீடு தானே, தியாகராஜ பெருமானும் இரு பிறையணிந்து காட்சியளிக்கிறார், இவற்றின் உண்மையான பொருள் அறியாமல், தம் மரபை கூற ஆள் இல்லைல்லாமல் வெறும் சூடம் ஏற்றி கும்பிடு போட்டுவிட்டு வருகிறோம்.
இப்படிக்கு
குணசேகரன்