Saturday, July 11, 2020

மழைப்பாடல்

 

அன்புள்ள ஜெ, 

மழைப்பாடலை மீண்டும் படித்துக்கொண்டிருக்கிறேன். நாவல் முடியப்போகும்போது மழைப்பாடலில் ஒவ்வொன்றாக தொடங்குவதைச் சென்று பார்ப்பதென்பது கொந்தளிப்பான ஒரு வாசிப்பை அளிக்கிறது. நான் வாசித்த காட்சி வசுதேவர் குந்தியைப் பார்க்க படகில் மழையில் வரும் இடம்.அப்போது அது உடன்நிகழும் ஒரு சம்பவமாக இருந்தது. இப்போது வாசிக்கும்போது அது ஒரு பழைய நினைவாக மாறியிருக்கிறது. பெரிய ஒரு நஸ்டால்ஜியா ஏக்கம் ஏற்படுகிறது. 

முதற்கனல் சுருக்கமானது. மழைப்பாடல்தான் உண்மையில் மிகவிரிவான நாவல். பிறகு வந்த வெண்முரசுநாவல்கள் அனைத்துக்குமான அடிப்படை வடிவம் உள்ளது மழைப்பாடல்தான். கங்கை சமவெளிக்கு வந்து விரிவும் நிதானமும் அடைவதுபோல. விரிந்து விரிந்து சென்றுகொண்டே இருக்கிறது. ஒரு காவியத்துக்கம் அளித்து நிறைவடைகிறது. நண்பர்கள் மழைப்பாடலை மீண்டும் வாசிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்

 

அர்விந்த்