அன்புள்ள ஜெ
நலம்தானே?
மழைப்பாடலின் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். ஒரு மாபெரும் நதிபோல போகிறது. துணைநதிகள் வந்து சேர்ந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு துணைநதியும் ஒரு கடல்போலிருக்கிறது. ஆயிரம் நாவல்களை தன்மேல் ஏற்றிக்கொண்ட நாவல் என்று மழைப்பாடலைச் சொல்லமுடியும். யாதவர்களின் கதை குந்தி அரசியாக முடிவெடுப்பது வரை ஒரு தனிநாவலாக எழுதமுடியும். காந்தாரியின் கதையை அப்படி ஒரு நாவலாக ஆககமுடியும்.
மழைப்பாடலை நான் விதியின் சமையலறை என்று சொல்வேன்
சுரேஷ் எஸ்,ஆர்