அன்பு ஜெமோ சார்,
வெண்முரசின் பாத்திரங்களின் உடல் அமைப்பில் கணிகரின் உடலமைப்பு முக்கியமானது.கோணலான உடல் கொண்டவர். ஏவலர் தூக்கி வரக் கூடிய, மனித உடலமைப்பிலிருந்து மாறுபட்ட உடல் கொண்டவர்.முழுமையான அழகு (ஒரு விரல் தவிர) பெற்ற இளைய யாதவரின் நேர் எதிரில் வைக்கத் தக்கவர்.இருவருக்குமான ஒருமை பேரழகான புன்னகை.
இன்னும் சொல்லப்போனால் இளைய யாதவனின் அந்த விரலின் பேருரு கணிகரோ
இரா.சிவமீனாட்சிசெல்லையா