Thursday, August 6, 2020

நகர்


அன்புள்ள ஜெ

களிற்றியானைநிரை நாவலில் ஒரு வரி வருகிறது. செங்குருதி கொழுங்குருதி அனற்குருதி புனற்குருதி எழுகிறது அறநிலத்தில். அரசகுடி அரக்ககுடி அசுரகுடி அல்லார்குடி அனைத்தும் திரள்கின்றன குருநிலத்தில்பாரதப்போரின் விளைவு தென்கோடி நிலத்தில் எப்படி சென்றுசேர்கிறது என்பதை அது காட்டுகிறது. அது ஓர் யுகப்புரட்சியாகவே அங்கே நிகழ்ந்திருக்கிறது. பாரதப்போர் எளியோரின் வெற்றியாக இல்லாமலிருந்தால் எளியோரின் தெய்வமாக கிருஷ்ணன் ஆகியிருப்பானா என்ற ஒரே கேள்விபோதும் இந்த வரி உண்மையானது என்பதை நிரூபிப்பதற்கு.

போர்முடிந்தபிறகு பாரதவர்ஷம் முழுக்கவுமிருந்து மக்கள் திரண்டு வந்து அஸ்தினபுரியை நிரப்புகிறார்கள். பழையனகழிந்து புதியன பிறக்கிறது. அந்த மாபெரும் சித்திரம் களிற்றியானைநிரையில் அழகாக அமைந்துள்ளது

ராஜசேகர்