அன்புள்ள ஜெ
வெண்முரசு மழைப்பாடலை இப்போதுதான்
படித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் முடித்தபிறகுதான் நான் ஆரம்பித்தேன். உண்மையில்
இந்த ஊரடங்கு இல்லாவிட்டால் வெண்முரசு வாசிப்பை ஆரம்பித்திருக்கவே மாட்டேன். ஆனால்
வேகமாகச் செல்கிறது. அன்றாடவாழ்க்கையின் சோர்வையும் சலிப்பையும் இல்லாமலாக்கி ஒரு மாய
உலகிலே வாழச்செய்கிறது
ஆனால் நான் மட்டுமே படித்துக்கொண்டிருப்பதுபோல
தோன்றுகிறது. இதற்கான விவாதங்களெல்லாம் நடந்துமுடிந்துவிட்டன. நான் மிகவும் பின்னால்
நடக்கிறேன். மழைப்பாடல் பற்றி வந்த கடிதங்களை எல்லாம் பின்னால் சென்று தேடிப்பார்க்கவேண்டியிருக்கிறது.
தலைப்புவாரியாக தொகுக்கப்பட்டிருந்தால் நன்றாக இருக்குமோ என்று நினைக்கிறேன்
முத்துமாணிக்கம். எம்