அன்புள்ள ஜெ
வெண்முரசு நாவல்களின் தொடரை
படித்து இப்போது பிரயாகையை வந்தடைந்திருக்கிறேன். இந்நாவலின் படிநிலைகள் மாறுவது ஆச்சரியமான
ஒரு விஷயம். இது உண்மையில் அதிலுள்ளதா இல்லை நானே நினைத்துக்கொள்வதா என்று தெரியவில்லை.
ஆனால் இது எனக்கு பலவகையிலும் முக்கியமானதாகப்பட்டது. மழைப்பாடல் ஒரு பெரியநிலத்தையும்
அங்கே அரசுகளையும் அவற்றிலுள்ள மக்களையும் காட்டுகிறது. அதுதான் அரங்கு. வண்ணக்கடல்
அந்த அரங்கைச்சூழ்ந்திருக்கும் ஆடியன்ஸை காட்டுகிறது. இந்தியா என்ற பெரிய அமைப்பு.
அதன்பின் நீலம் அதன் கதாநாயகனைக் காட்டுகிறது. கிருஷ்ணனை. பிரயாகை அதற்குப்பின் விதியையும்
விதியின் வடிவமான திரௌபதியையும் காட்டுகிறது. ஆச்சரியமான ஒரு அமைப்பு. மிகமெல்ல ஒரு
கோபுரம் எழுவதுபோல வெண்முரசு எழுந்துவருகிறது
சிவ.குழந்தைவேல்