Tuesday, October 25, 2016

விலக்குதலின் வழி




விலக்கி விலக்கி முன்செல்வதே காட்டைக் கடக்கும் ஒரே வழி. அங்கு அவனை வழிமறிப்பவை அவன் அஞ்சுவன அனைத்தும்தான். அச்சம் அழிந்து அவன் நின்றிருக்கையில்தான்  மூவிழியும் வெண்நீறும் புலியுரியும் பிறைநிலவும் உடுக்கும் சடையும் கொண்டு  கொலைதேர் கொடுஞ்சினக் காட்டாளன் ஒருவன் அவனை எதிர்கொள்கிறான்.

ஜெ

சைவ மாவிரத மார்க்கத்தின் வழி என்ன என்பதை மிகச்சுருக்கமாகச் சொல்லும் இந்த வரியை பலமுறை வாசித்தேன். சைவப்பேச்சாளர்கள் இந்தவகையில் சுருக்கமாக விளக்குவார்கள் என்றால் அவர்களின் சேவை மகத்தானதாக இருக்கும். விலக்கி விலக்கி முன் செல்வதும் சிவம் வந்து கண்முன் நிற்பதும் யோசிக்க யோசிக்க மனதிலே படமாக விரியும் சித்திரங்களாக உள்ளன

சபரிகிரிநாதன்