ஜெ
அஸ்ருபிந்துமதியின் கதை தேவிபாகவதத்தில் உள்ளது. அது முன்னரே முதற்கனலில் வந்துவிட்டது.
மாமலரில் அஸ்ருபிந்துமதியை யயாதியின் காமத்தால் கண்டடையப்பட்ட முழுமையான பெண்ணுருவம்
என்றும் தேவயானி சர்மிஷ்டை ஆகிய இருவரின் இணைப்பு என்றும் சொல்கிறீர்கள்.
ஆனால் தேவிபாகவதத்தின் அதே வடிவம் முதற்கனலில் உள்ளது. மாமலரிலிருந்து அந்த
கதைநோக்கிச் சென்றால் அது புதிய அர்த்தம் கொள்வதை உணரமுடிகிறது. அதோடு ஏன் பீஷ்மரை
நாகசூதன் யயாதியுடன் ஒப்பிட்டான் என்பதும் தெளிவாகத்தெரிகிறது. முதற்கனல் வாசித்து
பல ஆண்டுகளாகின்றன. கதையே இரண்டு தலைமுறைகளைக் கடந்துவிட்டது. ஆனால் கதைகள் இப்படி
ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொள்வது ஆச்சரியமான அனுபவமாக இருக்கிறது
என்று
யயாதியின் காமத்தை முதற்கனல் சொல்கிறது. அங்கே அவன் அஸ்ருபிந்துமதியிலும் நிறைவடையாமல்
சொர்க்கத்திலும் நிறைவடையாமல் உதிர்ந்துகொண்டே இருக்கிறான். அவன் நிறைவடைவது ஒரு மகள்
வடிவாக பெண்ணைப்பார்த்தபோது.
யயாதியின்
கதையை மாதவியால் அவர் நிறைவடைவதுவரை கொண்டுசென்றால் ஒரு பெரிய காவியமுடிவு கைகூடுகிறது
சுவாமி