தன்னிலையை இழந்தவன் பாம்புகளைப் பிடாரன் என மும்முக விசையை ஆள்கிறான். காட்டெரியின் நடுவே கரும்பாறையென நிலைகொள்கிறான். அனைத்துத் துயர்களையும் இடர்களையும் கனவிலெனக் கண்டு விழித்துக்கொள்கிறான்.
வெண்முரசில் நேரடியாகவே வேதாந்த ஞானம் சொல்லப்படுவது இங்கேதான். இதற்கு உதாரணமாகவே ராவணன் தன் பத்தாவது தலையையும் கொய்தபின்னர்தான் கடவிள் தோன்றினார் என்பது சொல்லப்படுகிறது
மிகவும் கடுமையான நேரடியான தத்துவமாகவே இருந்தது. ஆனாலும் வெண்முரசின் மையம் என்பதனால் கஷ்டப்பட்டு படித்தாகவேண்டும் என நினைத்து படித்தேன்
அனைத்தையும் சுவைத்தபின்னும் தனக்கென சுவையேதுமில்லாதிருக்கும் நாக்கு -ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன உவமை
செயல் வழியாக அறியமுடியாது என்று சுலபை சொல்கிறாள். அதற்கு ஜனகர் செயலில் எழும் அறிவும் செயல்மிச்சமே. எஞ்சாச்செயலே வீடுபேறளிக்கும் என்று அறிக! என்று பதில் சொல்கிறார்
ராமச்சந்திரன்