ஜெ
இன்றைய நீலத்தையே எண்ணிக்கொண்டிருந்தேன். கண்ணனை கைப்பற்றவே முடியாது. பிரேமையின் வெண்ணையாலேயே அவன் நழுவிக்கொண்டிருக்கிறான். யசோதைக்கே கூட.
“பற்றப்பற்ற வழுக்கிச்செல்கிறான். இவனைப் பற்றி நிறுத்தும் கை எங்கும் இல்லையடி
மிக யதார்த்தமாகச் செல்லும் அத்தியாயங்கள் நடுவே வரும் ஒற்றை வரி ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் மாற்றிக்காட்டுகிறது
அண்ணனைப் பால் கேட்டதுக்காக அம்மா திட்டுவதை கண்டதும் சின்னப்பிள்ளை மனம் ஓடும் ‘டிராக்’ அற்புதம்.
தன் வயிற்றைத் தொட்டு “கண்ணன் பாவம்” என்றபின் விழிசரித்து ஆழ்ந்து சிந்தித்து எடைகொண்ட எண்ணங்களை முழுவிசையாலும் முன்னகரச்செய்து அவ்வெதிர்விசையில் உடல் சற்று கோணலாக உறைந்து இருகணங்கள் கழித்து மீண்டு “கண்ணன், பால், சீச்சீ” என்றான். பிறகு எழுந்து வயிற்றைத் தொட்டு “கண்ணன் பாவம்” என்றான்.
உடனே அடுத்த வரி வந்து வேறெங்கோ எழுப்புகிறது
இங்கு நிகழும் எல்லாபிழைக்கும் இவனே ஆதாரம்
எத்தனைமுறைதான் படிப்பது
சுவாமி