Tuesday, September 2, 2014

வெண்ணை

ஜெ,

 ‘உள்ளுருகும் வெண்ணை’  என்றும் நினைவில் நின்று உருகப்போகும் ஒரு சொல். கண்ணன் வெண்ணை உண்ட காட்சியை ஒருபக்கம் முழுக்கமுழுக்க யதார்த்தத்துடனும் மறுபக்கம் முற்றிலும் தத்துவஞானத்திலும் சொல்லிச்செல்லும் இன்றைய அத்தியாயம் ஒரு பெரிய அற்புதம். கிரியேட்டிவிட்டி என்கிறோம். அது எப்போதும் மரபின் ரீ கிரியேஷன் தான். நவீன இலக்கியங்களில் சமகாலச்செய்திகளால் அதை மூடிவைத்திருப்போம் அவ்வளவுதான். அந்தப்பாவனைகள் இல்லாத வெண்கடல் நேராக அங்கே சென்று அமர்ந்துவிடுகிறது. கம்பனும் ஆழ்வார்களும் எல்லாம் அமர்ந்த இடம்

‘இவன் வெண்ணைச்சேற்றில் என்னையும் இழுத்துவிடுவான்’ என்ற வரி போதும். சங்குசக்கரங்களை உதைத்துவிளையாடக்கூடியவனின் லீலையை அறிய

சுவாமி