ஜெ,
நீலத்தின் அமைப்பு ஒருவழியாக பிடிபட்டு வருகிறது. யோகம் சார்ந்த அமைப்பு. ஒருபக்கம் கட்டற்று கைவிட்டு போகும்போதும் மறுபக்கம் இந்த அமைப்பை ஒரு கட்டமைப்பாக வைத்திருக்கிறீர்கள்
பூதனை[ அன்னை , மண், அன்னம், மூலாதாரம்] அப்புறம் திருணவரதன் [ காமம், காற்று, பிராணன்,] என்று போகிறது. இப்போது நீர். அடுத்து நெருப்பு வந்துவிட்டது. இனி ஆகாயமா?
ஒவ்வொரு அத்தியாயத்தின் முதற்சில சொற்களிலேயே அந்த அத்தியயாத்தின் கரு வந்துவிடுவதைக் கவனித்தேன். அந்தச் சொற்களில் ருந்து தான் ஆரம்பிக்கிறீர்கள் போல. அதைச்சொல்லி சொல்லி உருவேற்றி எழுதுகிறீர்கள்
ஆயர்குல மங்கையரே, கேளுங்கள். அன்றொருநாள் அனலெழுந்த கோடையில் கருக்கொண்ட காராம்பசுவொன்றை கருநாகமொன்று தீண்டியது.
என்ற வரியில் நெருப்பும் நாகமும் ஒன்றாவது நடந்து விடுகிறது
அதேபோல
நீரெல்லாம் கங்கை என்று சொல்லி என்னை வளர்த்தாள் என் அன்னை.
என்றவரியில் நீர் வந்துவிடுகிறது
சுவாமி
அன்புள்ள சுவாமி,
இந்நாவலை ‘திட்டம்’ ஏதும் இல்லாமல்தான் எழுதுஇறேன். ஒரு படி ஏறியதும் அடுத்த படி கன்ணுக்குத்தெரிவதுபோல. ஆனால் ஒரு அகத்திட்டம் இல்லாவிட்டால் வெறும் உளறல் தொகுதியாக ஆகிவிடும்
இந்நாவலில் எனக்குள்ள பயமே ஒவ்வொரு அத்தியயாமும் அன்றன்று வரவேண்டியிருக்கிறது என்பதே. நான் தினம் ஒரு ஊரில் தினம் ஒரு வேலையில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அகத்தே இதை மீட்டிக்கொண்டே இருக்கிறேன். அதனால் உருவாகும் எரிச்சலையும் அமைதியின்மையையும் காட்டிக்கொள்ளமால் இருக்கவே என் பிரக்ஞையின் பெரும் பகுதி செலவாகிறது. இந்த வேகம் சட்டென்று நின்று நாவல் அப்படியே அறுந்து போய்விட்டால் என்ன செய்வது என்ற அச்சமே இதை எழுதவைக்கிறது
ஜெ