நீங்கள் எழுதும் வகை போல் எழுத்து தன்னை எழுதி செல்லும் அதே வகை தானா கண்னனின் பாகங்கள் ,கதைகள்?
உச்ச
கட்ட பித்தில், பரவசத்தில், கனிவில் வழியும் எழுத்துகள் சற்று
கலவரபடுதுகிறது . உண்ணும் கிளி அதை பார்க்கும் கிளி இவ்விரண்டையும்
நோக்கும் கிளி என்பதவும் பாலெனும் பெருவெள்ளம் பால் கங்கை என்பதவும் யோக
அனுபவ பிதற்றல் போலவும் உள்ளது. குழந்தை தரும் பரவசத்தின் தருணங்கள்
போலவும் உள்ளது
கிருஷ்ணன் கஷ்டபடுத்துகிறான்....கையில் தொட்டாலும் பிடி வராத ஒட்டாத மெர்குரி போல் ஓடுகிறான் கண்ணன்
வானில்
விரையும் துகள்களாய், காற்று இல்லாத வெளியில் சீறும் ஒளி போல கிருஷ்ணன்
எனும் ஆள் மீது மட்டும் ப்ரேமம் இப்படி வழிந்து ஓடுகிறது ?மதுராவில் மாயம்
உணர்ந்தீரா என்ன ?
கிட்டத்தட்ட 8 மாதங்கள்... வெண்முரசு ....விட்ட அம்பு வீழாமல் சென்று கொண்டு இருக்கிறது. சென்று தைக்கும் வரை ஆசிர்வதித்து காத்து செல்லட்டும் - எந்நேரமும் உங்களகருகில் தெய்வத்தின் கரங்கள்
அன்புடன்
லிங்கராஜ்