Sunday, November 9, 2014

‘பிரயாகை- 16

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.

‘பிரயாகை’ என்ற பெயருக்கு ஏற்றார்ப்போல் இந்த 16 ஆம் அத்தியாயம் முழுவதும் ஒரே உணர்ச்சி பிராவகமாக பொங்கி வழிகிறது.ஒருவரைக்காட்டிலும் ஒருவராக தங்கள் தங்கள் ஆளுமைகளில் விஞ்சி நிற்கிறார்கள்.குறிப்பாக திருதராஷ்டிரர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது.

“ஆம், இம்மண்ணின் அனைத்து உரிமையும் அவனுக்கே என்று சொல்லி மண்ணுள்ளவரை அவன் குலம்வாழ்கவென்று வாழ்த்தி அளித்த என் அன்புக்கொடை இம்மணிமுடி. என் சிறுவனுக்களித்த கொடையில் ஒரு முன்விதியைச் சேர்க்கும் அற்பனா நான்? மண்ணில் ஒவ்வொருநாளும் அவனை எண்ணி ஏங்க என்னை விட்டுவிட்டு அவன் சென்றான். இங்கிருந்து அவனிடம் நான் வணிகம் பேசவேண்டுமா… எவரிடம் சொல்கிறீர்கள் அதை?” திருதராஷ்டிரர் தன் மார்பில் ஓங்கி அறைந்துகொண்ட ஒலி அவையை அதிரச்செய்தது. ”நான் விசித்திரவீரியரின் மைந்தன். ஹஸ்தியின் தோள்களைப்பெற்றவன். ஒருபோதும் சிறுமையை என் நெஞ்சு அறியாது.”

நீங்கள் அடிக்கடி பேசியும் எழுதியும் வருவதுபோல, மகாபாரதத்தின் மேன்மை நாளுக்கு நாள் உங்கள் எழுத்தில் சுடர்விட்டு பிரகாசித்து வருகிறது.நாங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள்.


அன்புடன்,

அ.சேஷகிரி.