Sunday, November 9, 2014

வண்ணகடல்- மிருகங்கள்- ராமராஜன் மாணிக்கவேல்




வண்ணக்கடல்-62
சில நரிகள், ஒரு ராஜநாகம், ஒரு மாருதி, ஒரு அஸ்வம், இன்று ஒரு சிறுத்தை எத்தனை அழகான கூட்டிணி வெண்முரசில்.

நாடு நாடாக இல்லாமல் காடாக இதைவிட பெரும் சித்திரம் தேவையா?
வள்ளலார் சிதம்பரம் ராமலிங்கசாமிக்காலத்தில் வாழ்ந்த நிருவாண சித்தர் ஒருவர் வீதியில் நடந்துசெல்லும் மனிதர்களைப்பார்த்து நாய்போகிறது, நரிபோகிறது, கழுதைப்போகிறது, புலிப்போகிறது என்று சொல்லி சிரிப்பாராம். இந்த மிருகங்கள் எல்லாம் அவரைப்பார்த்து சிரித்து வைக்க. முதன்முதலாக வள்ளலாரைப்பார்த்து !ஒரு மனிதன் வருகிறார் ஆடையில்லாமல் இருக்கிறேனேஎன்று நாணம் அடைந்தாராம்.வெண்முரசில் எத்தனை எத்தனை மிருகங்கள்.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மிருகம் அஸ்தினபுரிவரும்போது யானை அதைஅறிந்து தனது எச்சரிக்கையை செய்துக்கொண்டுதான் இருக்கிறது.மனிதன்தான் எல்லாம் மனிதன் என்று எண்ணி ஏமாந்துப்போகின்றான்.  

மிருகம் என்று எளிதில் சொல்லிவிடுகின்றோம்.ஆனால் மிருகம் அது மிருகம் என்பதை எத்தனை அற்புதமான மாறுவேடம் பூண்டு, பிறந்துவந்தாலும் காண்டுபிடித்து விடுகின்றது.மனிதன்தான் மாறுவேடம்கூட போடாமல் பேசி சிரித்விடுவதாலேயே மிருகத்தைகூட மனிதன் என்று நம்பி ஏமாந்துவிடுகின்றான்.  
ஆசிரியருக்கும் குருவுக்கும் என்ன வித்தியாசம்.

பீமனுக்கும் துரியோதனனுக்கும் துரோணர் ஆசிரியர்.அவர்கள் இருவரும் அவரிடம் பாடம் படித்தார்கள்.அவர் தந்த பாடம்போதும் அவர் யாராக இருந்தால் என்ன?பாடத்தோடு அவரின் பிணைப்பு அற்றுவிடும்.

அர்ஜுனனுக்கும் ஏகலைவனுக்கும் துரோணர் குரு.குருவின் பாடமாகவும் குருவாகவும் அவர்கள் இருவரும் மாற நினைக்கிறார்கள்.அதை அவர்களின் அகம் சொல்கிறது.

ஓசையற்ற காலடிகளுடன் முற்றத்தை அணுகி நான்குபக்கமும் நோக்கிவிட்டு மண்திண்ணையில் ஏறி சாளரம் வழியாகஉள்ளே நோக்கினான்உள்ளே படுத்திருந்த கரிய சிற்றுரு கொண்ட மனிதரைக் கண்டதுமே அவன் அகம் அவரைஅறிந்துகொண்டதுமுகம் மலர்ந்து கைகூப்பியபடி முகமும் மார்பும் தொடைகளும் மண்ணில்பதிய அவன் விழுந்துவணங்கினான்அவன் உடல் மழைக்கால நதிப்பரப்பு போல சிலிர்த்துக்கொண்டே இருந்ததுமெல்ல எழுந்தமர்ந்தபோதுதன் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி மார்பை நனைப்பதை உணர்ந்தான்கைகளால் துடைக்கத் துடைக்க கண்ணீர்ஊறி வழிந்தபடியே இருந்ததுநெஞ்சை அடைத்து அடக்கமுயன்ற மூச்சின் தடையை மீறி வெளிவந்த விசும்பல்ஒலியைக் கேட்டு அவன் உடலே அதிர்ந்தது

அர்ஜுனன் ஏகலைவன் மட்டும் இல்லை மண்ணில் பிறக்கும் எல்லாருக்கும் இப்படி ஒருவர் அகத்தை சுண்டி இழுக்கும்படி கிடைத்தால் அவர் குரு.கிடைத்தால் பேசாமல் காலில் விழுந்துவிடுங்கள் உங்களை சமர்பித்துவிடுங்கள்.

நன்றி

வண்ணக்கடல்-63

எந்த ஓரு முடிவும் மற்றொரு புதியதின்  ஆரம்பம். கர்ணன் துரோணரிடம் இருந்து முடிவுப்பெறும் இடத்தில் இருந்து ஏகலைவனின் தொடக்கம்.

கர்ணனும் துரோணரும் அவமதிப்பின் வழியாக ஆடிப்பிம்பமாக ஆகின்றார்கள் என்றால், உருவத்தால் தேடலால் ஏகலைவனும் துரோணரும் ஆடிப்பிம்பமாக மாறுகின்றார்கள்.
கர்ணனை சிதையேறு என்று கூறிய துரோணர் அன்று நதிக்கரையின் சரிவில் இரங்கி ஓடியவர் இன்று ஏகலைவனைக்கண்ட பின்பு அந்த நதிக்கரையின் புல்லில் தன்னை மறைத்து முகம்புதைத்துக்கிடக்கிறார். காலமும் இடமும்தான் வேறு வேறு மனநிலை ஒன்றுதான்.

சூதன் என்பதால் கர்ணனுக்கும் நிஷாதன் என்பதால் ஏகலைவனுக்கும் உடலால் குருவாக இருக்க முடியாத துரோணர் அகத்தால் குருவாக இருக்கிறார் என்பதை படிகசிலைபோல செதுக்கி அதில் படும்பொருளின் வண்ணத்தை அந்த படிகம் ஏற்பதுபோல் துரோணரை படைத்து அற்புதம் செய்கின்றார் ஜெ.

நல்ல குருமீது வன்மமும் கோபமும் கொள்ளாமல் இருக்கும் நல்ல சீடனின் மனநிலையில் நிற்கும் ஏகலைவன் அகமே துரோணரை அடைந்து அவரைப்பெற்றுக்கொண்டுவிட்டது.

குருவையே  இறைவனாகக்கண்டவன் கொண்டவன் இறைவன் அருள்போலவே கண்ணால்காணமல்  அருளால் எல்லாம் பெரும் பாக்கியம் பெருகின்றான் என்பதை ஏகலைவன் விற்கலை பயலும் சித்திரம் நெகிழவும், சிலிக்கவும் செய்து வண்ணக்கடலை இன்னும் கொஞ்சம் புதுவண்ணத்தில் அலையடிக்க வைத்தது.
இன்றைய வண்ணக்கடல் ஏகலைவன் படைப்பு அழியாத காவியம்.
வித்தையாகவே மாறிவிடும் கலைஞன் ஊரார் கண்ணுக்கு பைத்தியமாக தெரிவது எளிய காட்சிதான் என்றாலும் ஏதும் அறியாததாலேயே பைத்தியமாக இருக்கும் மக்கள் அறிந்தவனை பைத்தியமாக நினைப்பதுதான் இந்த வையத்தின் தோற்றப்பிழையா?
அரசி மெல்லிய புன்னகையுடன் “மைந்தர்களைப் பெற்றவர்களின் கனவுகள் முடிவதே இல்லை” என்றாள். “ஆம்,கனவுகள்தான்.

வாழ் நாளெல்லாம் தூங்கவிடாத இந்த கனவுதான் எத்தனை விசித்தரமானது.தந்தை மகன் என்று சுழலும் இந்த வாழ்க்கை சக்கரத்தில் தந்தைக்கும் மகனுக்கும் ஆயுள் நிர்ணயம் செய்த இறைவன் அந்த கனவுக்கு மட்டும் முடிவை செய்வதே இல்லை.இது ஆதி தந்தையின் கனவென்று நினைக்கிறேன்.அது மண்ணில் எப்படி முடிந்துவிடும். ஆதி தந்தை தாயின் கனவையும் கண்டு அந்த வண்ணத்தை கொண்டுவந்து  வண்ணக்கடலில் கலப்பதால்தான் ஜெ வண்ணக்கடலை அழியா வண்ணத்தல் ஆக்கி அழகுறவைக்கிறார்.

காதல்கொண்டவர்கள், பக்திக்கொண்டவர்கள், சீடராகுபவர்கள் உருவத்தில்தான் வேறுவேறு உள்ளத்தில் ஒன்றுதான்போலும்.
அவன் தன் கற்பனைகளில் அவரது கலைந்த தலையை தன் மடிமேல் எடுத்து வைத்துக்கொண்டான்அவரதுகால்களை தன் மார்போடணைத்துக்கொண்டான்.“என் உயிரை எடுத்துக்கொள்ளுங்கள் குருநாதரேதங்கள்வலியனைத்தையும் எனக்களியுங்கள் உத்தமரே” என்று கூவிக்கொண்டான்.

நன்றி