Thursday, November 6, 2014

வெண்முரசு விழா ஏன் 2

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் ...வெண்முரசு விழா ஏன் பதிவை படித்து
மிகவும் வருத்தம் அடைந்தேன் ..இந்த தொகுப்பு , இந்திய நிலம், அதில்
வாழ்ந்த அரசர்கள்,  மக்கள் அவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின்
பரிமாற்றங்கள் , மோதல்கள் என பலவிதமான வரலாற்று நிகழ்வுகளுக்கு ஒரு
ஆவணமாக வலுவாக இருகின்றது .. மேலும் அரசியல், காதல், காமம், அதிகாரம்
ஆகியவற்றால் மனித மனம் கொள்ளும் தாக்குதல், அயர்ச்சி, அலைகழிப்பு ,
சூழ்ச்சி என தத்துவார்த்த, ஆன்மீக தளங்களில் மிக ஆழமாகவும் , அழகாகவும்
விவரித்து செல்கிறீர்கள் ..

இந்த காரணங்களுக்காகவே , உங்களது இந்த தொகுப்பு, முழுவதுமாக புத்தக
வாசிப்பு பழக்கம் உள்ள அனைவரது,  தங்கள் வருங்கால சந்ததிகளுக்கு இந்திய
நிலம், பண்பாடு பற்றிய சொல்ல வேண்டும் என நினைப்பவர்கள் , மனித
வாழ்க்கையில் எதிர்கொள்ளும் உணர்வுகள், அலைமோதல்கள் ஆகியவற்றில் தத்துவ /
ஆன்மீக விருப்பம் கொண்டவர்களின் புத்தக அலமாரியில் அவசியம் இருக்க
வேண்டிய தொகுப்பு என நினைகின்றேன்..

தங்கள் தளத்தில் வாசிப்பவர் வருகை மிக அதிகமாக ஆகி இருகின்றது என்று
தங்களின் , நண்பர்களின் பதிவுகளை கண்டு , இணையத்தில் இந்த வரவேற்ப்பு
இருந்தால் , புத்தகத்திற்கும் வரவேற்ப்பு இருக்கும் என்று நினைத்கேன் ...
தங்கள் பதிவை பார்க்கும் போது உண்மை நிலை வேராக உள்ளது ...

தங்கள் பதிவை படித்த போது மனதில் உதித்த எண்ணங்களை சொல்ல நினைகின்றேன் ..
இந்த யோசனைகள் , தாங்கள், தங்கள் நெருங்கிய நண்பர்கள் ஏற்கனவே
யோசித்திருக்கலாம்...

- வெண்முரசு பதிவுகளை "venmurasu.in" பக்கத்தில் மட்டும் ஏற்றம் செய்து
(தங்கள் வலைத்தளத்தில் அல்ல) , அந்த தளத்திற்கு ஏன் ஒரு சிறிய தொகை
வசூலிக்க கூடாது?..அலுவகத்தில் நண்பரும் நானும் தங்கள் பதிவை பற்றி
பேசும் போதும் இதையே  நினைத்தோம் ...இதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை
என்று முன்பே கூறிஇருக்குறீர்கள்  .. ஆனால் இந்த தொகை லாபத்திற்காக
இல்லாமல் , ஓவியர் சண்முகவேலின் உழைப்பிற்க்கும், நற்றிணையின் நஷ்டத்தை
ஈடு கட்ட மட்டுமே உதவலாமே? .. கண்டிப்பாக சிறிய தொகை கொடுத்து வெண்முரசு
படிக்க  இணய வாசகர்கள் முன்வருவார்கள் என எண்ணுகிறேன் ..(whatsapp உக்கு
55 ரூபாய் என்றால், இதற்க்கு இன்னும் பல மடங்கு அதிகம் கொடுக்கலாம் :-)
).. இதை ஒரு கருத்து கணிப்பு மூலம் கூட உறுதி செய்து பின் அமல்
படுத்தலாம் . இணையத்தில் படிப்பவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சிறு
தொகை கூட நன்கு உதவலாம் ,,,

- வெண்முரசு புத்தகங்களை, தாள் புத்தகமாக கொண்டு வரும் அதே வேளையில் ,
கணினி புத்தகமாகவும்  கொண்டுவந்தால் வரவேற்ப்பு இருக்கும்.. அப்படி
ஏதேனும் திட்டம் உள்ளதா?

 இதுவரை நீங்கள் எழுதியிருக்கும் 4 புத்தகங்களையும் தினமும் பதிவுகள் வர
வர அன்றன்று படித்து அனுபவித்து கொண்டிருகின்றேன் ... நீலம் மனநிலை யில்
இருந்து வெளி வர நாட்கள் ஆகிற்று .. நீலம் ராதையின் ப்ரேமை விவரிப்பு
பகுதிகள் அனைத்தும் விஸ்வரூப தரிசனத்தையே மீண்டும் மீண்டும் மனதில் நிலை
நிறுத்தி கொண்டிருந்தது .. புத்தக வெளியீட்டுக்காக காத்திருகின்றேன் ..
மீண்டும் படிக்க ...!

தங்களுக்கும், தங்களின் இந்த மாபெரும் முயற்சியில் பங்கு வகிக்கும் ஏனைய
அனைவருக்கும் சோர்வோ, தொய்வோ வராமல் மேலும் மேலும் சிறப்பான படைப்புகளை
படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

அன்புடன்
வெண்ணி