அன்புள்ள ஜெ சார்,
வெண்முரசு விழா பற்றிய அறிவிப்பு வெளிவந்த அன்றே கட்டாயம் அதில்
கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய முதல் இலக்கிய விழா
இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்றும் விரும்பினேன். கடந்த வாரத்தில்
சென்னை வருவதற்கான ரயில் முன்பதிவும் செய்துவிட்டேன்.
நேற்று உங்களின் "வெண்முரசு விழா ஏன்?" எனும் பதிவைப் படிக்கும் வரை
விழாவில் கலந்துகொள்வதில் உறுதியாகவே இருந்தேன்.ஆனால் அந்தப் பதிவு என்
மனநிலையை மாற்றிவிட்டது. நான் விழாவில் பங்கேற்பதை விட உங்களின்
புத்தகங்களை வாங்குவதே எனக்கு சரியென்று படுகிறது.
இதுவரை வெண்முரசினை கணினியில் தான் படித்து வருகிறேன். வேலைக்குச்
சென்ற பிறகு தான் புத்தகங்களாக வாங்கி சேமித்துவைக்க வேண்டும் என்று
எண்ணியிருந்தேன். (பெரும்பாலான தமிழ் குடும்பங்களைப் போலவே என்னுடைய
வீட்டிலும் பாடப்புத்தகங்களைத் தாண்டி வேறு புத்தகங்கள் வாங்க தயக்கம்
காட்டுவார்கள்)
எனக்கு இதுதான் புதிராக இருந்தது. உங்கள் விழாவிற்கு வரவேண்டும் என
உடனடியாக முன்பதிவு செய்த நான், ஏன் உங்கள் புத்தகங்களை வாங்குவது பற்றி
சிறிதும் யோசித்துப்பார்க்காமல் இருந்தேன்? சராசரி தமிழ் மனதின்
வெளிப்பாடா எனத் தெரியவில்லை. ஆனால் மனப்பூர்வமாக உங்களுக்காக மட்டும்
தான் விழாவிற்கு வரவேண்டும் என்று எண்ணினேன்.
இப்போது முன்பதிவை ரத்து செய்துவிட்டேன். இந்த பயணத்திற்காக
எடுத்துவைத்த பணத்தில் "நீலம்" வாங்குவது என்றும், இனிவரும் மாதங்களில்
முடிந்தவரை பணம் சேர்த்து ஒவ்வொரு நாவலாக வாங்கவேண்டும் என்றும் முடிவு
செய்துள்ளேன். இதுவே உங்களுக்காக நான் செலுத்தும் நன்றி ஆக இருக்கும் என
நினைக்கிறேன். கூடிய விரைவில் வேலைக்கு சேர்ந்து அடுத்து வரும்
விழாக்களில் ஒன்றிலாவது கலந்துகொள்வேன். என்னதான் எழுத்து வடிவில்
நீங்கள் தினம்தோறும் என்னுடன் உரையாடினாலும் ஒரு முறையாவது உங்களை நேரில்
பார்த்துவிட வேண்டும் அவ்வளவுதான் என் விருப்பம். நிறைவேறும் என
நம்புகிறேன்.
(மத்திய நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். சேலத்தில் அம்மா
அப்பா உடன் வசித்து வருகிறேன். குடிமைப்பணியில் சேரவேண்டும் என்ற
விருப்பின் பேரில் அதற்காகத் தயாராகி வருகிறேன். என்னுடைய படிப்பு
செலவிற்காகவும் இணையப் பயன்பாட்டிற்காகவும் என்னுடைய அப்பா கொடுத்த
அந்தத் தொகையின் ஒரு பகுதியில் இருந்துதான் முன்பதிவு செய்தேன். - இதை
உங்களிடம் சொல்லிடவேண்டும் என்று தோன்றியது.)
உங்களது பொன்னான நேரத்தை வீணாக்கியதற்காக மன்னிப்புகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
வெண்முரசு விழா சிறப்பாக நடைபெற மனப்பூர்வமான வாழ்த்துகள் சார்.
நன்றிகள் ஜெ சார்.
தினேஷ் குமார்