அன்புள்ள ஜெ
பீமனும் அர்ஜுனனும் பேசிக்கொண்டிருக்கும் அந்த இடம் மிகமிக நுட்பமானது. ஆயுதசாலையில். இருவருக்கும் நடுவே ஆழமான நட்பு உள்ளது. ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். ஆனால் வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்தவர்கள். ஒருவன் கூர்மை. இன்னொருவன் மூர்க்கம் இல்லையா
அவர்கள் தங்களை மாறிமாறிச் சொல்லி புரியவைக்க முயலும்போது அவர்களின் முகங்கள் மட்டுமல்ல அகங்களும் நமக்குத்தெரியவருகின்றன
பீமனிடம் இருக்கும் அந்த நக்கலை மிகமிக ரசித்தேன். பிரச்சினையைச் சொற்றொடராக்கி தப்பித்துக்கொள்வதைப்பற்றிப் பேசுகிறான் பாருங்கள்- கிளாஸ். அது உண்மையும் கூட
பீமனை மூர்க்கமான மந்தனாகத்தான் இதுவரை கண்டிருக்கிறோம். மிக நுட்பமாக மனிதவாழ்க்கையை காண்பவர்களாக இருவரையுமே காட்டியிருக்கிறீர்கள். இரண்டுபார்வைகள் அருமையாக வெளியே வருகின்றன
தருமனின் ஆளுமை அதைப்போல சிறப்பாக வந்துள்ளது. சட்டென்று எல்லா கதாபாத்திரங்களையும் சமகாலத்தில் வைத்துப்பார்க்கமுடிகிறது
ஜெ