அன்புள்ள ஜெ,
நேற்றைய அத்தியாயத்தை வாசித்தபோது நினைத்துக்கொண்டேன் எழுத வேண்டும் என்று
நான் என் நண்பர்களிடம் சொல்வதுண்டு வெண்முரசு ஜெவின் அக்ரிகேட்டட் வொர்க் என்று. இதில் எல்லாமே இருக்கும். விஷ்ணுபுரம் முதல் எல்லா நாவல்களும்
ஒருவர் ஏழாம் உலகம் எங்கே என்றார். எல்லா நாவல்களிலும் ஏழாம் உலகம் இருக்கிறது என்று சொன்னேன். முதற்கனலில் பீஷ்மர் ஒரு சத்திரத்தில் சென்று படுக்கும்போது குடிகாரச் சூதர் பாடும் இடம் ஓர் உதாரணம். வண்ணக்கடலில் பல இடங்கள் உள்ளன
பிரயாகையில் இந்த இடம் [ 'பிரயாகை’ - 36 ] ஏழாம் உலகம். தலைக்குமேல் உள்ல உலகத்தைப்பார்த்து நக்கலும் நையாண்டியுமாகச் சிரிக்கும் ஒரு உலகம் இது
சிவம்