Thursday, November 27, 2014

மீண்டும் கிருஷ்ணன்




இனிய ஜெயம்,

மீண்டும் இந்த அத்யாயத்தை  வாசித்தேன்.  இன்று கிருஷ்ணனுக்கும் சகுனிக்கும் பெரிய பேதம் இல்லை. இருவருமே நாடிழந்த ஆளுமைகள்.

கையில் 'ஏதுமற்ற' நிலையில் அதிகாரத்தை அடைய இருவரிடமும் கைவசமிருக்கும் ஒரே ஆயுதம் தந்திரம்தான்.ஒரு கோணத்தில் மொத்த பாரதமும்  கிருஷ்ணன் சகுனி எதிர் எதிரே அமர்ந்து ஆடும் சதுரங்கமோ என்று தோன்றுகிறது.

கிருஷ்ணனின்  சொற்களில்  என்ன ஒரு தந்திரம். அதுவும்  குந்திக்கு எதிர் நிலையில் மற்றொரு பெண்ணை நிறுத்துவது வழியே  கிருஷ்ணன் எத்தனை நுட்பமாக குந்தியை நகர்த்தி செல்கிறான்? [பேசி முடித்து கண்ணீரை வேறு துடைத்துக் கொள்கிறான்] 'பேரரசர்'திருதுராஸ்த்ரர் உத்தரவு உத்தரவு வரும் வரையில் காத்திருக்கிரேன். என்ற சொல் செக் அன் மேட். இனி குந்திக்கு  செய்வதற்கு எதுவுமே இல்லை. எந்த மாற்று வழிகளுக்கும் வாய்ப்பே அளிக்காமல் கிருஷ்ணன் அனைத்து வாயில்களையும் அடைத்து விடுகிறான்.

சகுனிக்கோ அவனை இயக்குவது வன்மம். க்ரிஷ்ணருக்கோ  இது 'லீலை'. 

குந்தி க்ரிஷ்ணருக்கான உளவியல் ஆட்டடம். இந்த அத்யாயத்தின்  சிகரம். கிருஷ்ணனின் தந்திரத்துக்கு தான் ஆட்பட்டததை  குந்தி அறிந்தே இருக்கிறாள். பின் என் தோற்றவளின், 'கையாளப்பட்டவளின்' கசப்பு அவளில் மூளவில்லை.?

அதுதான் கிருஷ்ணனின் லீலை. குந்தி வசம் அரசியல் பேசி முடித்த கிருஷ்ணன் வேறு. பிருதை காலடியில் அமர்ந்து அண்ணாந்து அவள் முகம் நோக்கும் கண்ணன் வேறு.

பாதங்களை கட்டி அனைத்து கன்னத்தால் இழையும் மைந்தன் மீது கோபம் கொள்ளும் அன்னையை இயற்க்கை இதுவரை படைக்கவில்லை.

மீண்டும் வாசிக்கவேண்டும். 

கடலூர் சீனு