மதிப்பிற்குரிய
எழுத்தாளர்
ஜெயமோகன்
அவர்களுக்கு ,
வணக்கம். பிரயாகையில்
உவமைகளே
இல்லாதிருப்பது
ஆச்சரியம்
அளிக்கிறது.
மிக
யதார்த்ததலத்தில்
கூறுமுறை
என்றாலும்
அதற்கேற்ப
உவமைகள்
கூறுவது ,
உங்கள்
கைவந்த
கலை. (
சமீபத்தில்
படித்த
வெள்ளையானையில்,
நாவலின்
களத்திற்கேற்ப
உவமைகள்
கடல்சார்ந்து
வரும். -நான்
உங்கள்
உவமைகளின்
ரசிகன்).
ஒருவேளை
பிரயாகையின்
இந்தநடை,
நீலம் அழுத்தத்திலிருந்து விடுபடும் விழைவோ..)).
வெண்முரசு
விழா
ஏன்?
கட்டுரையில்
உங்கள்
வருத்தம்
சரியே.
உ.வே.சாமிநாதய்யருக்கு
பிறகு
தமிழில்
நிகழும்
பெரும்பணி
உங்களுடையது.
உங்கள்
சொந்தப்பணத்தைத்தான்
செலவிடவேண்டியிருக்கும்
என
சொன்னது,
மிகுந்த
மன
உளைச்சலை
தருகிறது.
இதற்குமுன்
தமிழில்
அது
நடந்திருக்கிறது.
இனிமேல்
அது
கூடாது,
நிச்சையமாக
என்னை
போன்ற
வாசகர்கள்
பலர்
அந்தசெலவை
ஏற்றுக்கொள்ள
முடியும்.
அதை
ஒருங்கிணைப்பதை
நீங்கள்
உங்கள்
நண்பர்கள்
வசம்
விடலாம்.
நாம்
ஒன்று
சேர்ந்து
இப்பெரும்பணியை
முடிப்போம். (பிழை
இருப்பின்
மன்னிக்கவும்).
நன்றி
கருணாகரன்.
அன்புள்ள கருணாகரன்,
வெண்முரசின் ஒட்டுமொத்தமான அழகியல் செவ்வியல்தன்மை கொண்டது. அணிகள் நிறைந்தது. அதற்குள் ஒவ்வொருநாவலுக்கும் நடையிலும் அமைப்பிலும் வேறுபாடு உண்டு. ஒவ்வொன்றும் ஒன்றுதான்
முதற்கனலில் இருந்த அணிசெறிந்த நடை மழைப்பாடலில் இருக்காது. வண்ணக்கடல் தத்துவார்த்தமானது. நீலம் கற்பனாவாத வீச்சுள்ளது. பிரயாகை ஒப்புநோக்க யதார்த்தபாணி கொண்டது
பேசுபொருட்களால் தீர்மானிக்கப்படும் விஷயம் இது
ஜெ
anpuLLa