அன்புள்ள ஜெ
crisis என்று வரும்போது நாம் ஒரு விஷயத்தை அறிகிறோம். அது destined என்பதுதான் அது. பிசினஸில் இருப்பவர்களுக்கு அது தெரியும். அதை விதி என்று சொல்ல மாட்டேன் . அந்த ஒட்டுமொத்த structure ல் அப்படி நிகழவேண்டும் என்று ஒரு prefixed mode இருக்கிறது. அவ்வளவுதான்.
அதுதான் இந்த சந்தர்ப்பத்திலும் நிகழ்கிறது. பிரயாகை 42 . எல்லாம் சின்னதாக ஆரம்பிக்கிரது. ஆனால் சின்னது இல்லை. அதற்குள் பெரியது இருக்கிறது. முதலில் சின்ன misunderstanding ஆக அது வெளியே வருகிறது. கொஞ்சம் கொஞமாக பெரியதாகிறது
முதலில் தர்மன் செய்யும் சின்ன தப்பு. அதைசரிசெய்வதற்குள் துரியோதனன் வருகை. அதன் விளைவாக குந்தியின் அடுத்தடுத்த தப்புகள்
இப்படி நிகழவேண்டும் என்று அந்த structure விரும்புகிறது அவ்வளவுதான்
சிவராமன்