ஜெ
இன்றைய அத்தியாயம் பிரயாகையில் துரியோதனனுக்கும் திருதராஷ்டிரனுக்கும் நடக்கும் அந்த உச்சகட்ட உணர்ச்சி மோதலை பிரமிப்புடன் வாசித்தேன். ஒரு கிளாஸிக் நாடகத்திலோ தெருக்கூத்து மாதிரியான ஒரு ஃபோக் தியேட்டரிலோதான் இத்தகைய காட்சி வரமுடியும். அது யதார்த்தத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும் அதன் வேகம் அதை மீறி இருக்கிறது
இரண்டுபேருமே monster தன்மை கொண்டவர்கள். அவரது அந்த அரக்கத்தன்மை இவனிடமும் இருக்கிறது. இந்த அத்தியாயத்தில்தான் துரியனின் அரக்கத்தன்மை எங்கிருந்து வந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இவனுக்குக் கண் இருக்கிறது. ஆனால் கண் இல்லாதவனைப்போல உடல்மொழி ஆகியிருக்கிறது. அதுதான் ஆச்சரியமான வேடிக்கை. அப்படி நிறையபேரை பார்க்கலாம். அந்த மூர்க்கம் குருட்டுத்தனம் கண் இருந்தும் இவனுக்கு வந்திருக்கிறது
அது இங்கே உணர்ச்சிகரமாக positive ஆகத்தான் வந்திருக்கிறது. என்னால் அவமதிப்புகளைத் தாளமுடியவில்லை என்று அழும் துரியனைப்பார்த்து பரிதாபம்தான் வருகிரது. ஆனால் பயமாகவும் இருக்கிறது
சாமிநாதன்