ஜெ,
குந்தியின் கதையில் மீண்டும் ஆதி அன்னையாகிய கத்ருவைச் சந்தித்தது மனநிறைவை அளித்தது. முதர்கனலில் கத்ருவை வாசித்தபோதே ஏன் நாகத்தைப்போய் ஆதி அன்னையாக காட்டினார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் அதற்குக் கார்ணம் நாகம் தான் ஆயிரக்கணக்கில் முட்டை போட்டு ஏராளமான குட்டிகளை உருவாக்கும் என்பதுதான் என்று தோன்றியது
பாம்புப்பண்ணையில் பாம்பு முட்டை பொரித்திருப்பதை பார்த்திருக்கிறேன். அள்ளி அள்ளி குவிக்கலாம். அப்படி கூட்டமாக போட்டிருக்கும். அந்தக்காலத்தில் அவ்வளவு பிள்ளைகளை ஆசைப்பட்டிருக்கிறார்கள். அவ்வளவு பிள்ளை பெறுபவள் பாம்பு அம்மாவாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள்
நான் சிறுமியாக இருக்கும்போது எனக்கு இருந்த கனவு நிறைய பிள்ளைகள் வேண்டும் என்பதுதான். வீடெல்லாம் குழந்தைகள் இருக்கும் கனவு அடிக்கடி வரும். போதும்போதும் என்றானது பிறகு வந்த கதை )))
எஸ்