Thursday, January 15, 2015

குருதிப்பெண்



பிரயாகை 83 –ல் இன்னொரு காட்சியும் அபாரம். ‘செங்குருதியில்’ திரெளபதி நீராடும் இடம். உண்மையில் குருதியில் நீராடினால் என்ன என்கிறாள். காட்டரசி உக்ரசண்டிகையின் விழிகள் அவ்வப்போது திரெளபதியில் உயிர் கொண்டுவிடுகின்றன. அல்லது சண்டிகை அவளில் சமபங்கம். குருதியைக் கண்டு திரெளபதி அடையும் கிளர்ச்சி குருஷேத்ரத்தில் விழப்போகும் குருதியை நினைவுறுத்துகிறது.

ராஜா