Thursday, February 12, 2015

கரிய காட்டாறு



//“மூத்தவரே, நீங்கள் அப்புன்னகையைப் பார்த்திருக்கவேண்டும். அத்தனை அழகிய புன்னகை. திருடிஉண்ட குழந்தையை பின்னால் சென்று செவிபிடித்தால் சிரிப்பதுபோல. அப்படியே அவரைச் சென்று அணைத்துக்கொள்ளவேண்டும் போல தோன்றியது.” அர்ஜுனன் சிரித்தபடி “மூத்தவர் ஓர் அழகிய குழந்தை. இறுதிவரை அப்படித்தான் இருப்பார். அவர் இருக்கும் வரை நம்முடன் காட்டுதெய்வங்களனைத்தும் துணையிருக்கும்” என்றான்.//

இன்றைய அத்தியாயம் துள்ளல்கள் நிறைந்த காட்டாறு, மூன்று முறை வாசித்து விட்டேன், சிரித்து, சிரித்து, இன்னும் முடியவில்லை,  ஒரு வழியாக அரசு சூழ் தலில்  வந்து முடிந்ததால்,  அந்த சிரிப்பு புன்னகையாக மாறியது.

தொடர்ந்து சிகரம் ஏறிக்கொண்டே போகும் ஞான யானை நம்ம ஜெ சார்......அவ்வப்போது இது போன்ற குளிர்ந்த அத்யாயங்கள்  யானையின் உத்வேகதோடு நாமும் ஏற துணை நிற்கட்டும்..... 
 
அன்புடன்
சௌந்தர்.G