ஜெ
வெண்முரசில் பூரிசிரவஸின் கதைப்பகுதி மிகவும் தனித்து நிற்கிறது. இவ்வளவு பக்கங்கள் கதைச் சொன்ன பின்னர் இப்படி புதியதாக ஒரு கதைசொல்லும்முறை திறந்துகொள்வது ஆச்சரியமாக இருக்கிறது. கதைசொல்வதற்கு முடிவே இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.
ஒவ்வொரு பெண்ணையும் ஒவ்வொரு பின்னணியில் ஒவ்வொரு தோற்றப்பொலிவுடனும் குணாதிசயத்துடனும் காட்டியிருக்கிறீர்கள். அந்த நுட்பங்களை சுவைத்துவாசித்தேன்
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அத்தனை பெண்களுமே முதலில் கேட்கும் கேள்வி திரௌபதியைப்பற்றித்தான் என்பது. திரௌபதியிடமிருந்தே அவர்கள் பேச ஆரம்பிக்கிறார்கள். திரௌபதியைத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்
இது ஏன் என்று சிந்தித்தேன். திரௌபதி அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாகவோ அல்லது பொது எதிரியாகவோ இருக்கிறாளா என்ன?
அல்லது இவர்களெல்லாம் பரிவாரதேவதைகள் தானா?
சுந்தரம்