Friday, April 10, 2015

துரியனும் பூரிரவசும்






அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

பூரிசிரவசை நினைத்து மனம் வருந்துவதை தவிர்க்க முடியவில்லை.

ஒவ்வொரு பெண்ணாலும் கவரப்பட்டு, பின் பல்வேறு காரணங்களால் துரதிர்ஷ்ட வசமாக அவர்களை இழப்பது, என்ன செய்வது விதி வலியது.

இதைப்போலவே மனம் கவர்வது அவனுக்கும் துரியன் மற்றும் கர்ணன்  இடையே உள்ள நட்புதான்.

நாம் எப்போதுமே ஒருவழிப்பார்வையாகவே துரியனை காண பழகி விட்டோம். அவன் தீயவன் என்றே பலரால் படிப்பிக்கபட்டு ஒரு முன்முடிவுடனே இதுவரை அவனை அணுகினோம். தங்கள் எழுத்துகளினூடாக  அவனின் நல்ல குணங்களும் ஈகை மனமும் தெரிகிறது.

ஒரு காரணமும் இல்லாமலா அவன் கூடவே கடைசி வரை கர்ணன், அஸ்வத்தாமன், கிருதவர்மன், சல்லியன், பூரிஸ்ரவஸ் போன்றவர்கள் இருந்திருப்பார்கள் !

ஒரு விதமான சமகால நடைமுறைகள் மற்றும் பொருளியல் ரீதியான அணுகுமுறைகளோடு தாங்கள் இதை படைப்பது, ஒரு பெரும் சிறப்பு.

அதன் கூடவே, பூரிஸ்ரவசின் கனவுகள் ஒருவித flashback  என்பதன் எதிரான flashfuture  வகையில் எழுதப்பட்டு, ஒருவித காவியக்கனவு நிலையை அளிக்கிறது.

உடன், சாத்யகியின் பாத்திரமும் நன்றாகவே வளர்ந்து வருகிறது. அவன் அதிர்ஷ்டக்காரன். நேர்நாயகர்கள் கூடவே விசுவாசமாக வாழ்கிறான். ஒரு தடுமாற்றமும் இல்லை.

தங்கள் எழுத்துக்களின் மாபெரும் சிறப்பே, எங்களையும் மானசீகமாக கதாபாத்திரத்தின் கூடவே பயணிக்க வைப்பது.
நன்றிகள் பல ஜெ.


அன்புடன்,

கணேஷ்
பஹ்ரைன்