Monday, May 4, 2015

கண்ணனின் மேலாண்மை



மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். சில விஷயங்கள்.

கிருஷ்ணன் அனைவரின் பெயரையும் கவனத்தில் வைத்திருக்கிறான். மேலாண்மை உத்திகளில் இதுவும் ஒன்று. ஒருவரின் பெயரை நினைவில் வைத்து சந்திப்புகளின் போது அழைக்கையில் அவர் நெருக்கமானவராக ஆகிறார். நெப்போலியனின் படைகள் அவரிடம் மிகுந்த விசுவாசமாக இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.    


 மகாபாரதம் - கும்பகோணம் பதிப்பிற்கு ராமானுஜாசாரியார் நிறைய கஷ்டப்பட்டதாக சொல்லி இருந்தீர்கள்.  அதை பற்றி வாசகர்களுக்கும் சொல்ல வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.

அன்புள்ள ராஜாராம்

கிருஷ்ணனின் இயல்புகளை வெவ்வேறு கோணத்திலே பார்க்கலாம். மேலான்மைத்திறன் அவற்றில் ஒன்று. பெயர்களை அறிந்துவைத்திருப்பது மட்டும் அல்ல, ஆன்மாக்களையும் அறிந்து வைத்திருக்கிறான். ஒருவரை பார்த்ததுமே உள்ளே நுழைந்துவிடுகிறான்

ராமானுஜாச்சாரியார் பற்றி எழுதவேண்டும், பார்ப்போம்
ஜெ