ஆசிரியருக்கு ,
வெண் முரசில் ஒவ்வொரு சூதர்பாடலும்
அது எழும் தருணத்துடன் தொடர்புடையது, அப்படித்தான் அம்பை-தாட்சாயணி
துவங்கி முதலிரவுகளுக்கு முன் அமைந்த பாடல்கள் வழி இப்போது தீர்கசியாமரின்
கலியுகம் இரும்பின் யுகம் என்பது வரை .
இப்படி
கட்டித் தழுவிக் கொண்டிருப்பவர்கள் எப்படி வெட்டிக் கொள்கின்றனர் , இது கலி
யுகம் இரும்பாய் வன்மம் தேங்கிய துரியன் ஒரு கலி நாயகன், அவனை மீறியது
அவனுக்குள் முதன்மையாக -பிறருக்குள் சில பிசிறாக.
அறச்
செல்வனான தர்மன் பொன்- வாரனவத எரிப்பில் அவன் 5 வனவாசிகளை பலிகொள்கிறான்
சிறிது இரும்பு கலந்துள்ளதை காண்கிறோம், கர்ணனின் மீது வன்மம் கொண்ட பீமன்
வெள்ளி- குண்டாசியைத் தழுவும்போது அவனுள் இருக்கும் அகலாத இரும்பை நாம்
காண்கிறோம், பெண்களை வெறுத்து பொருட்படுத்தாதவன் அர்ஜுனன்
செம்பு-அஸ்வத்தாமன் மீது அம்பெய்யும்போது அவனுள் இருக்கும் இரும்பைக்
காண்கிறோம். வாரனவதைனாலும் , காம்பில்ய முற்றுகையினாலும் துரியன்
இரும்பு- கர்ணனையும் பூரிசிரவச்சையும் இப்போது பாண்டவர்களையும் தழுவிக்
கொள்ளும் போது அவனிடம் நாம் காண்பது ஒரு பொன் வெளிச்சம்.