சென்னையில் ஒரு வாசகர் முகாம் நடத்த வேண்டும் என்கிற எங்கள் நெடுநாள் விருப்பம் ,கடந்த ஞாயிறு மாலை இனிய நினைவுகளாகவும் , மிகச்சிறந்த கலந்துரையாடலாகவும் ,நிறைவேறியது .
மிக சீரியஸாக இல்லாமல் சின்ஸியராக அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக விவாதித்தது , வெண் முரசு வாசகர்கள் எவ்வளவு ஆழமாக வெண் முரசை அணுகுகிறார்கள் என்பதை காட்டியது , காளி பிரசாத்தும் , ரகுவும் , பேசுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்ததால் , நாங்கள் அனைவரும் காதுகள் { கேட்க } மட்டும் கொண்டுவந்து இருந்தோம் , ஆனால் அவர்களின் விரிவான பேச்சு எங்கள் வாயை பிடுங்கி பேச வைத்து விட்டது, செந்தில் குமார் தேவன் வட்ட தலைவர் என்கிற முறையில் விவாதத்தை தொடக்கி வைத்தார், ஸ்ரீனிவாசன் , சுதா தம்பதியினர், காளி யை பேச அழைக்க , ஒரு 5 பக்க கட்டுரையுடன் தொடங்கினாலும் , படித்து மனப்பாடம் செய்திருப்பது போல் , அழகாக வெண் முரசு தலைமுறையை அடுக்கிக்கொண்டே வந்தார் , ஒரு சில இடங்களில் மட்டும் அந்த பேப்பரை பார்த்துக்கொண்டார் ,என்ன பேசினார் என்பதை அவரே பதிவதாக சொல்லிருக்கிறார் ,
அடுத்ததாக ரகுவின் உரை, வெண்முரசில் கிருஷ்ணன் என்கிற தலைப்பில் மிக நீ.......ண்ட விவாதமாக இருந்தது.. தேர்ந்த வாசகர் என்கிற முறையில் ஜாஜாவின் கருத்துக்கள் அனைத்தும் எங்கள் அனைவருக்கும் மேலும் ஒரு வாசிப்பு முறையை அறிமுகம் செய்தது எனலாம் , 14 பேர் கொண்ட இந்த முதல் வாசிப்பனுபவ கூடுகை முயற்சி, மிக திருப்தி கரமாக அமைந்தது. பரிட்சைக்கு வருவதுபோல மிகவும் டென்சனாக வந்த கவிதா, கூட்டம் முடிந்து போகும்போது மிக சகஜமான நட்புடன் சென்றது சிறப்பு . இனி தொடர்ந்து மாதாந்திர கூடுகை நடைபெறும் என்பதில் , எந்த மாற்றமுமில்லை.நண்பர் ஜடாயு போல கம்பராமாயணம் நடத்தவேண்டும் என்று ஆசானிடம் சொன்னபோது , இது போன்ற செயல்களை விடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும், இல்லையேல் ...... என்று கொஞ்சம் பயமுறுத்தி இருந்தார் . கனடா போவதற்கு முன் அவரிடம் இந்த கூடுகை குறித்து செந்திலும் நானும் சொல்லி அனுமதியும் பெற்றுகொண்டோம்.
சென்னை மட்டுமில்லாது ,பாண்டிசேரி /கடலூர் மக்களையும் அடுத்த கூடுகைக்கு அன்புடன் அழைக்கிறோம்
அனைவருக்கும் நன்றி
அன்புடன்
சௌந்தர் .G