Wednesday, June 24, 2015

சென்னை வெண்முரசு கூட்டம்


சென்னையில்  ஒரு  வாசகர் முகாம்  நடத்த வேண்டும் என்கிற எங்கள்  நெடுநாள் விருப்பம் ,கடந்த ஞாயிறு மாலை  இனிய நினைவுகளாகவும் , மிகச்சிறந்த கலந்துரையாடலாகவும் ,நிறைவேறியது .
மிக  சீரியஸாக  இல்லாமல்  சின்ஸியராக  அனைவரும்  கலந்து கொண்டு  சிறப்பாக  விவாதித்தது , வெண் முரசு  வாசகர்கள்  எவ்வளவு  ஆழமாக  வெண் முரசை  அணுகுகிறார்கள்  என்பதை  காட்டியது  , காளி பிரசாத்தும் , ரகுவும் , பேசுவதாக  ஏற்கனவே  அறிவித்து  இருந்ததால் , நாங்கள் அனைவரும் காதுகள் { கேட்க } மட்டும்  கொண்டுவந்து  இருந்தோம் ,  ஆனால்  அவர்களின்  விரிவான  பேச்சு  எங்கள்  வாயை  பிடுங்கி  பேச  வைத்து விட்டது,  செந்தில்  குமார்  தேவன் வட்ட  தலைவர் என்கிற முறையில்  விவாதத்தை  தொடக்கி  வைத்தார், ஸ்ரீனிவாசன் , சுதா  தம்பதியினர், காளி யை  பேச  அழைக்க , ஒரு  5 பக்க  கட்டுரையுடன்  தொடங்கினாலும் , படித்து  மனப்பாடம்  செய்திருப்பது  போல் , அழகாக  வெண் முரசு  தலைமுறையை  அடுக்கிக்கொண்டே  வந்தார் , ஒரு  சில  இடங்களில் மட்டும்  அந்த பேப்பரை  பார்த்துக்கொண்டார் ,என்ன பேசினார் என்பதை அவரே  பதிவதாக  சொல்லிருக்கிறார் ,

அடுத்ததாக  ரகுவின்  உரை,  வெண்முரசில்  கிருஷ்ணன்  என்கிற  தலைப்பில்  மிக  நீ.......ண்ட  விவாதமாக  இருந்தது.. தேர்ந்த  வாசகர் என்கிற முறையில்  ஜாஜாவின்  கருத்துக்கள்  அனைத்தும் எங்கள்  அனைவருக்கும் மேலும்  ஒரு வாசிப்பு  முறையை  அறிமுகம்  செய்தது எனலாம் , 14 பேர்  கொண்ட  இந்த முதல் வாசிப்பனுபவ கூடுகை  முயற்சி, மிக  திருப்தி கரமாக   அமைந்தது. பரிட்சைக்கு  வருவதுபோல  மிகவும்  டென்சனாக  வந்த  கவிதா, கூட்டம்  முடிந்து  போகும்போது  மிக  சகஜமான நட்புடன்  சென்றது சிறப்பு . இனி  தொடர்ந்து  மாதாந்திர  கூடுகை  நடைபெறும்  என்பதில் , எந்த  மாற்றமுமில்லை.நண்பர்  ஜடாயு  போல   கம்பராமாயணம் நடத்தவேண்டும்  என்று  ஆசானிடம்  சொன்னபோது , இது போன்ற  செயல்களை  விடாமல்  தொடர்ந்து  செய்ய  வேண்டும், இல்லையேல் ...... என்று  கொஞ்சம்  பயமுறுத்தி  இருந்தார் . கனடா  போவதற்கு முன்  அவரிடம்  இந்த  கூடுகை  குறித்து  செந்திலும்  நானும்  சொல்லி  அனுமதியும்  பெற்றுகொண்டோம்.

சென்னை  மட்டுமில்லாது ,பாண்டிசேரி /கடலூர்  மக்களையும்  அடுத்த  கூடுகைக்கு  அன்புடன் அழைக்கிறோம்

அனைவருக்கும்  நன்றி


அன்புடன்

சௌந்தர் .G