ஆசிரியருக்கு ,
முன்பு சத்ரஜித்தின் தம்பி பிரசேணன், இப்போது அக்ரூரரும் கிருதவர்மரும், இதன் மத்தியில் அப்பட்டமாக சததன்வா. இதன் ஒரு இழை திருஷ்டத்தியும்னனிடமும் உள்ளது.
சியாமந்தக மணி விழைவுகளை உருவாக்குகிறது, ஆசையைத் தூண்டுகிறது இறுதியில் ஒவ்வொருவராக அழிக்கிறது.
நமது
காமம் , மோகம் மற்றும் குரோதம் ஆகியவற்றிற்கு ஒரு உருவகம் உண்டென்றால் அது
இம்மணிதான் . இப்போது அனைவரின் முகங்களிலும் மின்னும் ஒரே பாவம் , அது
சியாயாமந்தகம்.
சென்ற நாவலில் சாத்யகியும் பூரிசிரவச்சும் என்றால் இந்நாவலில் சாத்யகியும் திருஷ்டத்தியும் னனும் இரட்டை நாயகர்கள்.
கிருஷ்ணன்