Wednesday, July 8, 2015

மணியின் முகங்கள்

ஆசிரியருக்கு ,

முன்பு சத்ரஜித்தின் தம்பி பிரசேணன், இப்போது அக்ரூரரும்  கிருதவர்மரும், இதன் மத்தியில் அப்பட்டமாக சததன்வா. இதன் ஒரு இழை திருஷ்டத்தியும்னனிடமும் உள்ளது.       

சியாமந்தக மணி விழைவுகளை உருவாக்குகிறது, ஆசையைத் தூண்டுகிறது இறுதியில் ஒவ்வொருவராக அழிக்கிறது.    

நமது காமம் , மோகம் மற்றும் குரோதம் ஆகியவற்றிற்கு ஒரு உருவகம் உண்டென்றால் அது இம்மணிதான் . இப்போது அனைவரின் முகங்களிலும் மின்னும்  ஒரே பாவம் , அது சியாயாமந்தகம்.   

சென்ற நாவலில் சாத்யகியும் பூரிசிரவச்சும் என்றால் இந்நாவலில் சாத்யகியும்  திருஷ்டத்தியும்னனும் இரட்டை நாயகர்கள்.  

கிருஷ்ணன்