ஜெ,
அர்ஜுனனுக்கும் திரௌபதிக்கும் அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் இடையே உள்ள உறவு நுட்பமாக வெளிப்பட்டதை இரண்டாம்தடவை வாசித்தபோதுதான் உணர்ந்துகொண்டேன். ஆச்சரியமாக இருந்தது.
திரௌபதியின் உடலை அவன் அணுவணுவாகக் கவனிக்கிறான். புதிய பருக்களைக்கூட பார்க்கிறான். நகை அழிந்திய தடம்கூட தெரிகிறது
ஆனால் சுபத்திரையைப் பார்ப்பதே இல்லை. அவள் சாதாரணமாகச் சொல்லப்படுகிறாள்
அதோடு அவளும் ஒரு உதாசீனமாகத்தான் இருக்கிறாள். அவள் சுபகைக்கும் அர்ஜுனனுக்கும் இடையே உள்ள உறவை அறிந்ததும் ஒரே ஒதுக்கில் அதைக் கடந்துசெல்கிறாள். ஒரு சின்ன சங்கடம்கூட இல்லை.
ஏனென்றால் அவளுக்கு அர்ஜுனன் ஒரு பொருட்டே கிடையாது. இதுதான் கடைசிவரைக்கும் வரப்போகிறது
எம்