ஜெ
காண்டீபத்தின் முடிவில் மீண்டும் ஒரு கடிதம் எழுதவேண்டும் என நினைத்தேன். நடுவே கொஞ்சம் வாசிக்கவிட்டுவிட்டேன். ஒருமாசம் கடந்து வந்து பிடித்துவிட்டேன். புத்தகங்களை வாங்கி வாசித்ததுதான் மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. நாவல்களை வாசிக்கும்போது உள்ள அனுபவம் புத்தகன்ங்களில்தான் மிகச்சிறப்பாக வருகிறது என நினைக்கிறேன். நாட்கணக்கில் மூழ்கிக்கிடக்க முடிகிறது. ஒருவேலையாக கௌஹாத்தி போனபோது ஆறுநாட்கள் அங்கே ஒரு கெஸ்ட் ஹவுஸில் ராத்திரி பகலாக இருந்து இந்திரநீலத்தை வாசித்துமுடித்தேன். நீலமும் இந்திரநீலமும் இரண்டு வகையில் கிருஷ்ணனைக் காட்டுகின்றன. இந்திரநீலம் அவ்வப்போது நீலமாக மாறி திரும்பிவந்தது. எல்லா பெண்களும் ராதைகள் அல்லவா
ஆனால் காண்டீபத்திலே பெண்கள் எவரும் அர்ஜுனனுக்ககா ஏங்குவதைச் சொல்லவில்லை. ஏனென்றால் நாவல் பெரும்பாலும் அர்ஜுனன் வழியாகவே சென்றது. அவனுடைய பார்வைதான் வெலிப்பட்டது. கடைசியில் அவன் திரௌபதியைப்பார்க்கும் பார்வையிலேயே காமம்தான் இருந்தது. அப்படியே நாவல் முடிந்ததனால் பெண்மனம் வெளிப்படவில்லை. அல்லது நேரடியாகவெளிபப்டவில்லை.
முழுமையான ஒரு இலக்கிய அனுபவம்
சாரதி