Wednesday, January 6, 2016

குறுக்குக்கோடுகள்



ஜெ

கர்ணனின் இந்த நாவல் முழுக்க ஒரு வகை குருட்டுமூர்க்கம் வெளிப்படும் அத்தியாயங்களும் வந்துகொண்டே இருக்கின்றன.  அது கர்ணனின் ஒளிகொண்ட மனசுக்கு நேர் எதிராக இருக்கிறது. பரசுராமனின் வன்மமும் தீர்க்கதமஸின் குருட்டுக்காமமும் கர்ணனுக்கு எதிர்மறையானவை. ஆனால் சிந்தித்துப்பார்த்தால் அவனுக்குள் இந்த வேகங்களும் எப்படியோ ஏதோ ஒருவகையில் இருந்துகொண்டிருக்கின்றன என்றும் நினைக்கத்தோன்றுகிறது

கர்ணனைப்புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவன் பலவகையான உணர்வுகளால் ஆனவன்.  அவனை நேரடியாக ஒருவகையில் சொல்லிக்கொண்டு செல்லும்போது இந்தவகையான துணைக்கதைகள் வழியாக குறுக்குவாட்டிலும் சொல்கிறீர்கள். இதெல்லாம் வெண்முரசில் வந்துகொண்டிருக்கும் உத்திகள் என தோன்றுகிறது

சுவாமிநாதன்