Monday, April 4, 2016

அனைவரின் ரக்தபீஜன்






ஜெ

பன்னிரண்டு ஆண்டுக்காலம் குடித்துச்சீரழிந்தவன் நான். இப்போது நினைத்தாலும் ரக்தபீஜனின் கதை குடியின் கதைபோல பயமுறுத்துகிறது. இந்தக்கதையில் ரக்த்பீஜனை குடியின் வடிவமாகவே நினைத்தேன். குடி என்று இல்லை. மனசால் எதனுடனெல்லாம் போராடுகிறோமோ அதெல்லாமே ரக்தபீஜன்தான்

முதலில் ஒருதுளிதானே என்ற கியூரியாசிட்ட்டி. என்ன நடந்துவிடும் பார்ப்போமே என்கிற குறுகுறுப்பு. அப்புறம் இதைச்செய்யமுடியும் என்னால், என்னால் கட்டுப்படுத்தமுடியும் என்னும் திமிர், அப்புறம் நிறுத்தமுடியாத நிலை. மனசு பதறிக்கொண்டிருந்தாலும் போய்க்கொண்டே இருப்பது. ஒருதுளி, இதோ அடுத்த துளி என்று போகும். கடைசியாக ஒரு தற்கொலை வெறி

அந்த சித்திரம் பயமுறுத்தியது ஜெ. உண்மையிலேயே இரண்டாகப்பிரிந்துதான் நான் ரக்தபீஜனை வென்றேன்.

ராமச்சந்திரன்