துணி தைப்பவனைப் பார்க்காமல், அத்துணியையும் காணாமல், அவன் கையிலிருந்து ஓடும் ஊசியை மட்டும் பார்த்தால் அதன் ஓயாச்செயல்பாடு திகைப்பூட்டும் பொருளின்மை
ஜெ,
வேதாந்தமே உவமைகள் வழியாக மட்டுமே பொருள்புரியக்கூடிய ஒன்று என்று சொல்வார்கள். ஏனென்றால் அது கண்கூடான ஒரு விஷயத்தைப்பற்றிப் பேசவில்லை. அது பேசுவது சித்தம் வெளி ஆத்மா பரமாத்மா போன்ற விஷயங்களைப்பற்றி. அதை அறிந்துகொண்டே இருக்கலாம். உணர்வதற்கு ஒரு தருணம் வரவேண்டும்
வேதாந்த உவமைகள் நிறைய உண்டு.வெண்முரசிலேயே வந்துகொண்டே இருக்கின்றன. இன்று வந்துள்ள இந்த உவமை முக்கியமான ஒன்று என நினைக்கிறேன். அந்த ஊசி காற்றில் அர்த்தமில்லாமல் கும்மாளமிடுவதைக் கனவு போல காணமுடியவேண்டும்
ஜெயராமன்